செய்திகள்

காதல் முறிவால் என்னால் திருமணம் செய்ய முடியாது, ரெஜினா விளக்கம்..!( Actress Regina , I can’t get married because of love breakup)

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் இவர் மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா. இந்நிலையில்  அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவருக்கு விரைவில் திருமணம் என்று சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.

இதனால் நடிகை ரெஜினா முதல் முறையாக திருமணம் குறித்து : ” 2020ஆம் ஆண்டு என்னுடைய காதல் முறிந்தது. அதிலிருந்து வெளிவர கொஞ்ச நாட்கள் ஆனது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை.

Actress Regina

திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. ஏனென்றால், சிறு வயது முதல் எனது சொந்த காலில் சுயமாக எப்படி வாழ்வது என்பதை பற்றி தான் என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

எனவே வாழ்க்கையில் யாரவது துணையாக வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன் ” என்று பேசியுள்ளார் ரெஜினா.

Similar Posts