என்னால் சமந்தாவிற்கு குரல் கொடுக்க முடியாது, பதிவிட்ட சின்மயி..!
சமீபத்தில் தான் சின்மயி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். இதனால் மெல்ல மெல்ல திரையுலகில் இருந்து ஒதுங்கும் நோக்கத்தில் அவர் இது போன்ற முடிவுகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமந்தாவிற்கு தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்த பிரபல பாடகி சின்மயி இனிமேல் பின்னணி குரல் கொடுக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக எனது பயணம் முடிவடையும் என நினைக்கிறேன். இனிமேல் எனது நெருங்கிய தோழி சமந்தாவிற்கு பின்னணி குரல் கொடுக்க இயலாது என பதிவிட்டுள்ளார்.