சின்னத்திரை

பணத்திற்காக திருமணம் செய்யவில்லை நான், ஆவேஷப்பட்ட மகா..!

திரையுலகத்தில் மட்டுமன்றி வெளியிலும் பர பரப்பாக பேசிவரும் செய்தி மகாலட்சுமி. இவர் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார் .

இதனையடுத்து பணத்திற்கு ஆசைப்பட்டு தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், அவர் பேசியதாவது ‍பணத்திற்கு ஆசைப்பட்டுதான் நான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். என் தந்தை மிகவும் பிரபலமான நடன இயக்குநர். அவர் யார்ன்னா சங்கர் ஐயாதான்.

அவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி என்று பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், பாகுபலி, ஆர்.ஆர். பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். நான், என் மகனை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு சம்பாதித்து வருகிறேன்.

என்னுடைய மாத வருமானம் மட்டும் 3 லட்சம். இப்படி இருக்கும்போது, நான் எதற்கு பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்ய வேண்டும்.

நான் ரவீந்தருடைய குணத்தை பார்த்து தான் திருமணம் செய்துள்ளேன். நான் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

உண்மையில் என்னைவிட ஒல்லியான, அழகான, வசதியான நபர்கள் வேறு யாரும் சினிமா துறையில் கிடையாதா. தற்போது இருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்துக்கான பணத்தை பார்ப்பார்களே தவிர, ஒருவருடன் வாழ்க்கை முழுவதும் நன்றாக வாழ முடியுமா என்றுதான் யோசித்து தங்களின் துணைகளை தேர்ந்தெடுப்பார்கள். அந்த அளவிற்கு தற்போது உள்ள பெண்கள் தெளிவாக இருக்கிறார்கள். என்று பேட்டி அளித்துள்ளார்.

Similar Posts