செய்திகள்

எனக்கு தான் பாலியல் சீண்டல் இருந்தது..விஜயலட்சுமி ஓபன் டாக்!

சிவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலட்சுமி.

அடுத்தபடியாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய விஜி, டைட்டில் வின்னர் ஆனது மட்டுமின்றி ரூ.1 கோடி பரிசுத் தொகையையும் வென்றார்.

 இவர் பேட்டி ஒன்றில் மீடூ குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : சினிமாவில் கேஸ்டிங் கவுச் என்பது இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் இதற்கு காரணம். எதோ ஒரு பெண் சம்மதித்ததனால் தான் மற்ற பெண்களிடமும் கேட்குறாங்க, எனக்கும் இதுபோல் நடந்திருக்கிறது.

சிறுவயதில் நான் கராத்தே கற்றுக்கொள்ள சென்றபோது அந்த மாஸ்டர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அதை உடனே என் தந்தையிடம் வந்து சொன்னேன். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே குட் டச் எது பேட் டச் எது என்பதை சொல்லிக்கொடுத்தால் இதுபோன்ற சூழல்களில் பாதுகாப்பாக இருக்கும்” என விஜயலட்சுமி ஒப்பனாக தெரிவித்துள்ளார்.

Similar Posts