மனதுக்கு பிடித்தது போல மட்டும் தான் வாழ்வேன்-நடிகை ஸ்ருதிஹாசன்..!(I will live only as I like-Actress Shruti Haasan)
நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ”சினிமாவில் எத்தனை உடைகளை மாற்றினாலும், எந்த விதமான உடை அணிந்தாலும், எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் என் மனதுக்கு பிடித்தது போல மட்டும் தான் வாழ்வேன் .
அனைவரையும் திருப்தி படுத்தவேண்டும் என்று நினைக்காமல், மனதுக்கு சந்தோஷம் எதுவோ அப்படியே இருந்து கொள்வது, நடந்து கொள்வது மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் அப்படி வாழ்வதற்குதான் விரும்புவேன்” என்றார்.