செய்திகள்

நான் காலை பிடிக்க மாட்டேன்..நீங்கள் என்ன சொன்னாலும்..!

முன்னணி நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர் வடிவேல் . இவர் தற்போது நாய் சேகர் returs மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாய் சேகர் returns படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.

ஆனால் முக்கியமாக சுராஜ் இயக்கிய ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். தனுஷின் திரைப்படம் படிக்காதவன். இதில் விவேக் நடித்திருந்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது வடிவேலு தான். தீடீரென ஒரு நாள் படத்தில் இருந்து விலகிவிட்டாராம் வடிவேலு.

ஏனென்றால், வில்லன் நடிகர் சுமன் கால்களை பிடித்து நடிப்பது போல் நகைச்சுவை காட்சி ஒன்று படிக்காதவன் படத்தில் இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் சுமன் கால்களை பிடித்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் வடிவேலு. இதனால் வடிவேலுவுக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.

இயக்குனர் சொல்வதை போல் நடிங்க என்று தனுஷ் கூற, கடுப்பான வடிவேலு சந்திரமுகி படத்தில் ரஜினிக்கே சில விஷயங்களை நான் சொல்லிக்கொடுத்தேன். மருமகன் எனக்கு சொல்லி கொடுக்கிறார் என்று ஆவேசப்பட்டார்.பிரச்சனைகளுக்கு பின் முழுமையாக படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டாராம்.

Similar Posts