செய்திகள்

ஆண்டி என்று அழைத்தால் பொலிஸில் வழக்கு தொடர்வேன், அனுசுயா அறிவிப்பு!

நடிகை அனுசுயா அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற படத்தில் வில்லியாக நடித்தார். தற்போது அனுசுயா தன் பங்குக்கு ‘லைகர்’ படத்தை நெகட்டிவ் விமர்சனம் செய்தார்.

இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அவரை திட்டியதோடு, ஆன்ட்டி என்றும் அழைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் தாங்க‌ முடியாமல் தன்னை ஆன்ட்டி என்று விமர்சிப்பவர்கள் மீது போலீஸில் புகார் கொடுப்பேன் என்று எச்சரிக்கை செய்துள்ளார் அனுசுயா.

தன்னை ஆன்ட்டி என அழைப்பவர்களின் பதிவுகளை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வழக்குத் தொடுப்பேன் என எச்சரித்துள்ளார். 

Similar Posts