செய்திகள்

பிடித்தால் பாருங்கள் இல்லை என்றால் விமர்சிக்கலாம்..!

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‛பிசாசு 2′ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மிஷ்கின் கூறுகையில், ‛‛என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள், இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை,உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்” என்கிறார்

Similar Posts