சின்னத்திரை

நேரில் பார்த்தால் கண்டிப்பா அறைவேன்,அருண் ஆவேஷம்..!

சீரியல்களின் மூலம் மக்கள் வகையில் பிரபலமாக இருப்பவர் அருண் ராஜன்.  இவர் அழகி, வாணி ராணி, சந்திரலேகா, கல்யாண பரிசு, பிரியசகி, சந்திரகுமாரி, பூவே உனக்காக போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் குமார் ராஜன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பயில்வான் ரங்கநாதன் குறித்து கூறியிருந்தது, சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டது ரொம்ப கேவலமான செயல்.

இன்றைக்கு அவர் கூட நடித்த சீனியர் நடிகர்கள் குறிப்பாக கவுண்டமணி சார் பற்றி எல்லாம் பேசுவது எப்படி சரியாக இருக்கும்? இந்த மாதிரி பேசி சம்பாதிக்கிற பணத்தில் எப்படி சாப்பிடுவது செரிமானம் ஆகிறது? என்று எனக்கு தெரியவில்லை. இப்படி பேசுவதால் எத்தனை பேருடைய மனசு உடைந்து இருக்கும்.

அப்படி ஒருவரை துன்புறுத்தி அதன்மூலம் கிடைக்கிற பணத்தை அவருடைய குடும்பம் சாப்பிடுவது என்றால் அது ஜீரணம் ஆகாது. அவரை நேரில் பார்த்தால் நான் கண்டிப்பாக அறைந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

Similar Posts