ரித்திகா சிங்கின் இன்கார் திரைவிமர்சனம் | Ritika Singh’s InCar Movie Review
இன்கார் திரைப்படம் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் ஒரு கும்பலால் கடத்தப்படும் கதை.படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு
இயக்கம்:
ஹர்ஷ் வர்தன்
தயாரிப்பு:
அஞ்ஜூம் குரேஷி மற்றும் சாஜித் குரேஷி
வெளியீடு:
கோவிந்த் யாதவ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
ரித்திகா சிங், கியான் பிரகாஷ், சந்தீப் கோயத், சுனில் சோனி மற்றும் மணீஷ் ஜான்ஜோலியா
இசை:
மத்தியாஸ் டுப்ளெஸி
படத்தின் கதை
இன்கார் திரைப்படம் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் ஒரு கும்பலால் கடத்தப்படும் கதை.சாக்ஷி குலாட்டியாக, இறுதிச்சுற்று ரித்திகா சிங் நடித்துள்ளார். ஒரு நாளைக்கு இந்தியாவில் சுமார் 100 பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்ற புள்ளி விவரத்தினைச் சொல்கிறார் இயக்குநர் ஹர்ஷ் வர்தன் ஒரு எரியும் பிரச்சினையை எடுத்து அதை திறம்பட வழங்க முயற்சித்துள்ளார்.

முழுப் படமுமே, கடத்தப்படும் பெண்ணின் மன வேதனையைப் பிரதிபலிக்கவே எடுக்கப்பட்டது. அரை அடி தூரத்தில், பெண் போலீஸ் அமர்ந்திருக்கும்போது, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் சாக்ஷி குலாட்டி எனும் இளம்பெண்ணைக் கடத்தி விடுகின்றனர்.கடத்தல்காரர்கள் பேசுவது, கோழியை எப்படி அனுபவிக்க வேண்டும் என அவர்கள் பேசுவது, விருந்திற்குப் பின் சாக்ஷியை என்ன செய்யவேண்டும் என கடத்தல்காரர்கள் எடுக்கும் முடிவு என ஒவ்வொரு நொடியும் சாக்ஷிக்கு ஏற்படும் மன உளைச்சலும், பதற்றமும், பயமும் அதிகரித்த வண்ணமே உள்ளன. முழுப் படமும், காருக்குள்ளேயே ஒரே மாதிரியான அவஸ்தையான டோனில் நகர்வது, நாயகிக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் இறுக்கத்தை ஏற்படுத்துகின்றன.

படத்தின் நாயகி கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள், ஆனால் அவளுடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன. அதனால் அந்த கும்பலுடன் சண்டையிட்டு அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முடிவு செய்கிறாள். அவளால் அதை செய்ய முடிந்ததா? அந்தக் கும்பல் யார், ஏன் அவளைக் கடத்தினார்கள் என்பதே மீதிக் கதை
படத்தின் சிறப்பு
பாதிக்கப்பட்ட பெண்ணாக ரித்திகா சிங் தனது கதாபாத்திரத்திற்கு முழு வடிவம் கொடுத்துள்ளார்.
டிரைவராக கியான் பிரகாஷ், சந்தீப் கோயத், சுனில் சோனி மற்றும் மணீஷ் ஜான்ஜோலியா ஆகியோர் அந்தந்த பாத்திரங்களில் கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் சொதப்பல்கள்
காகிதத்தில் உள்ளடக்கம் வலுவாகத் தெரிந்தாலும், செயல்படுத்தல் சிறப்பாக இருந்திருக்கலாம்.
மதிப்பீடு: 2.75/5
பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் ஆணோ, பெண்ணோ அத்தனை சீக்கிரம் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியேறுவதில்லை எனும் உண்மையை மட்டும் முகத்தில் அறைந்தாற்போல் உணர வைத்துள்ளது இப்படம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.