செய்திகள் | சின்னத்திரை

மெட் காலா 2023 இல் இந்திய பிரபலங்களின் சிறந்த அழகு தருணங்கள் | Indian celebrities’ best beauty moments at the Met Gala 2023

மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் வருடா வருடம் மே 1ஆம் தேதி மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் புதுமையான உடைகள் அணிந்தபடி ரெட் கார்ப்பெட்டில் வலம் வருவார்கள். ஒரே நிகழ்ச்சியில் உலக நாடுகளின் பிரபலங்கள் சங்கமிப்பதால் இந்நிகழ்ச்சியை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Indian celebrities’ best beauty moments at the Met Gala 2023

ஆண்டுதோறும் தவறாமல் நடக்கும் இந்த நிகழ்ச்சி கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு மட்டும் நடைபெறவில்லை. இந்தச் சூழலில் 2023ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. டிசைனர் கார்ல் லாகர்ஃபெல்ட்டிற்கு அஞ்சலி என்ற கருப்பொருளோடு இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி தொடங்கியது.

Indian celebrities’ best beauty moments at the Met Gala 2023

மெட் காலா 2023 நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து ப்ரியங்கா சோப்ரா, ஆலியா பட், முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி கலந்துகொண்டனர். ப்ரியங்கா சோப்ரா, இஷா அம்பானி உள்ளிட்டோர் இதற்கு முந்தைய மெட் காலாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் ஆலியா பட் கலந்துகொள்ளும் முதல் மெட் காலா நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts