செய்திகள் | திரைப்படங்கள்

நடிகர் ஜீவாவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது | Information about actor Jeeva’s new film is out

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ், பங்குச் சந்தையில் களமிறங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

Information about actor Jeeva’s new film is out

இந்த விழாவில் பேசிய ஐசரி கே கணேஷ் வேல்ஸ் பிலிம்ஸ் தற்போது 5 திரைப்படங்களை வெளியிடவுள்ளது. ஐந்து படங்களை தயாரித்து வருவதோடு, மேலும் 5 படங்களின் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளதாகக் கூறினார். இதில் ஜெயம் ரவியின் 32வது திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Information about actor Jeeva’s new film is out

அந்த வகையில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இன்னொரு படத்தில் பா.விஜய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில், அர்ஜூன் – ஜீவா – ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க, இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார் ஐசரி கே கணேஷ். முக்கியமாக இந்தப் படம் பான் இந்தியா ஜானரில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த இரண்டு படங்களின் அபிஸியல் அப்டேட் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

l

Similar Posts