செய்திகள் | திரைப்படங்கள்

அதிதி ஷங்கர் நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் | Information about Aditi Shankar’s upcoming film

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

Information about Aditi Shankar’s upcoming film

இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மாவீரன் படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி,இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தை ஆகாஷின் மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறாராம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

Similar Posts