செய்திகள் | திரைப்படங்கள்

ஜெயம் ரவியின் 32 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது | Information about Jayam Ravi’s 32nd film is out

ஜெயம் ரவி கல்யாண் இயக்கத்தில் சமீபத்தில் அகிலன் படத்தில் நடித்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது.

இதனையடுத்து அவர் சைரன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அந்தோணி பாக்கியராஜ் இயக்குகிறார். ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரவி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Information about Jayam Ravi’s 32nd film is out

இந்நிலையில் ஜெயம் ரவியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரவியின் 32ஆவது படமாக உருவாகும் அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. அதுமட்டுமின்றி 18 மொழிகளில் வெளியாகவிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் எனவும் பேச்சு எழுந்திருக்கிறது. சூர்யா 42 படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கும் சூழலில் ரவியின் படம் 18 மொழிகளில் வெளியாகவிருப்பதாக வந்திருக்கும் தகவல் கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Similar Posts