செய்திகள்

நடிகை நயன்தாராவிடம் விசாரணை..! தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்(Investigation with actress Nayanthara..! Tamil Nadu Health Minister)

ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்ட நிலையில், நயன்தாரா எப்படி குழந்தை பெற்றுக்கொண்டார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “21 வயது முதல் 36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். திருமணம் ஆகி, கணவரின் ஒப்புதலுடன் இதைச் செய்ய வேண்டும்.

நடிகை நயன்தாரா விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாரா என மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் மூலம் அவரிடம் விளக்கம் கேட்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நயன்தாராவிடம் விரைவில் விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Investigation

Similar Posts