நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் இறுகப்பற்று..!(Irugapatru Of Actor Vikram Prabhu and Shraddha Srinath)
நடிகர் விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்திலும், ‘ரெய்டு’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் புதியப் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் ‘இறுகப்பற்று’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படம் திரைக்கு வரும் முன்பே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
