பிக்பாஸ் ஜூலி பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா? Is Bigg Boss Julie in love with a famous actor’s son?
சென்னை பிரபல நடிகரின் மகனை பிக் பாஸ் ஜூலி காதலித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரீனாவே கொந்தளித்த நிலையில், வித்தியாச வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜூலி. போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி பிக் பாஸ் முதல் சீசனில் முன்னணி நடிகர்களுடன் அவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதையடுத்து, பங்கமாக அசிங்கப்பட்டு வெளியேறிய ஜூலிக்கு எங்கு போனாலும், மக்கள் வெறுப்பை காண்பித்தனர். இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி வருவதாகவும், அதே போல ஓரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தன்னால் முடித்த உதவியை செய்ததாகவும் கூறி, தனக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்தார்.

இருவரும் காதலிப்பதாக வதந்தி ஒருபுறம் பரவி வரும் நேரத்தில், ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாரிக்குடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு அதற்கு கேப்ஷனாக, இவன் எனது உண்மையான நண்பன் எனது ஆன்மாவின் புத்துணர்ச்சி என்று பதிவிட்டு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி உள்ளார். இதனால், ஷாரிக்கின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் காதல் விவகாரம் உண்மையா இல்லை இதுவும் வழக்கமாக பரவும் உருட்டா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.