செய்திகள்

அன்சுமாலிகா நடிக்க வருவதாக சொன்னது பொய்யா..?-ஆர் கே செல்வமணி(Is it a lie that Ansumalika is coming to act?- RK Selvamani)

ரோஜா – செல்வமணி மகள் அன்சுமாலிகா தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தி பரவி பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரோஜாவின் கணவர் ஆர் கே செல்வமணி கோபமாக பேசிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. என் மகள் சினிமாவில் அறிமுகமாகுகிறார் என்று யார் சொன்னது.

ன் மகள் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு. அமெரிக்காவில் பாஸ்டன் யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சையின்ஸ் 4வது வருடம் பட்டப்படிப்பை படித்து வருகிறார். தி ஃபிளேம் இன் மை ஆர்ட் என்ற புத்தக்கத்தையும் எழுதியிருக்கிறார்.

நன்றாக படிக்கும் அன்சுமாலிகா, சமுக சேவை மற்றும் வேறுசிந்தனைகளில் இருப்பதால் அவருக்கு சினிமாவே பிடிக்காது. இதை தெரியாமல் ஊடகங்கள் என் மகள் பற்றி தேவையற்ற செய்தியை பரப்பியது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

எங்களிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் நாங்களே இதுபற்றி சொல்லியிருப்போமே என்று கோபத்துடன் கூறியிருக்கிறார் ஆர் கே செல்வமணி.

RK Selvamani

Similar Posts