செய்திகள் | திரைப்படங்கள்

காளிதாஸ் ஜெயராம் இந்தியன் 2வில் இணைகிறாரா? | Is Kalidas Jayaram Joining Indian 2?

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக திட்டமிடப்பட்டது.

அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது.

Is Kalidas Jayaram Joining Indian 2?

இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. அதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

Is Kalidas Jayaram Joining Indian 2?

இந்நிலையில் விக்ரம் படத்தில் கமல் ஹாசனுக்கு மகனாக நடித்த காளிதாஸ் ஜெயராம் இந்தியன் 2 ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார். தைவானிலிருந்து ஷங்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் இருக்கிறார்.

Similar Posts