சூர்யா 42 டைட்டில் இதுவா..? | Is this Suriya 42 title?
சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

10 மொழிகளில் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில், இந்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மொழிகளில் வெளியாகவுள்ளதால் சூர்யா 42 படத்திற்கு ‘வீர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த டைட்டிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சூர்யா 42 படத்திற்கு அக்னீஸ்வரன் என டைட்டில் முடிவு ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹிஸ்டாரிக்கல் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஒரு போர் வீரனாக நடித்து வருகிறாராம். அதானால், கடவுளின் பெயரான அக்னீஸ்வரன் என்பதையே இப்படத்திற்கு டைட்டிலாக வைக்க சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.