தளபதி 67 படத்தில் நடிக்கும் விஜய் சம்பளம் வாங்காமல் நடிக்கிறாரா? Is Vijay acting in Thalapathy 67 acting without getting salary?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, நிவின் பாலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சூர்யா மற்றும் கமல் ஹாசன் இருவரும் கேமியோ ரோலில் நடிக்க பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகர் விஜய் சுமார் ரூ. 130 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தளபதி 67 படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சம்பளமாக எதுவும் வாங்கவில்லையாம்.

அதற்க்கு பதிலாக படத்தின் பிஸ்னஸ் வசூலில் இருந்து ஷேர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 படத்திற்காக விஜய் இப்படியொரு விஷயத்தை செய்துள்ளார்.
ஆனால், விஜய்க்கு முன்பே, ரஜினிகாந்த் இந்த விஷயத்தை செய்துள்ளார். சிவாஜி படத்தில் நடிக்கப்போழுது ரஜினிகாந்த் ரூ. 1000 மட்டுமே சம்பளமாக பெற்று கொண்டு அதன்பின் படத்தின் பிஸ்னஸ் வசூலில் இருந்து ஷேர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.