விஜய் சேதுபதியின் மகன் விடுதலை 2 வில் நடிக்கிறாரா? | Is Vijay Sethupathi’s son acting in ViduthalaiPart2?
வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவரது மகன் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. முதல் பாகத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கதாபாத்திரத்தில் சூரி, வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்திருந்தனர். முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் குறைவாக இருந்தது. இதனையடுத்து இரண்டாம் பாகத்தில் அவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், லேட்டஸ்ட் தகவலின்படி, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அவரது கதாபாத்திரம் கனமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ‘விடுதை பார்ட் 2’ படப்பிடிப்பில் சூர்யா வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.