செய்திகள் | கலை காட்சி கூடம்

தாஜ்மகாலில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி | Jayam Ravi romancing his wife at the Taj Mahal

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களையும் காதல் மூடுக்கு கொண்டு வந்துள்ளார்.

Jayam Ravi romancing his wife at the Taj Mahal

பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அகிலன், இறைவன் என இந்த ஆண்டு அடுத்தடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன.

பொன்னியின் செல்வனாக இருந்த ஜெயம் ரவி திடீரென வெண் தாடி வேந்தராக மாறி சமீபத்தில் புதிய கெட்டப் உடன் போஸ் கொடுத்து வருகிறார். இளம் ஹீரோக்களாக ரசிகர்களை கவர்ந்து வந்த பலரும் தற்போது டை கம்பெனிகளுக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே மாஸ் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தனது மனைவியுடன் நடிகர் ஜெயம் ரவி தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்று அங்கே பிரத்யேகமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவியை ரொமான்டிக் மோடில் பார்த்த ரசிகர்கள் செம க்யூட் தலைவா நீங்க என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அகிலன், இறைவன், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் என மார்ச், ஏப்ரல் என அடுத்தடுத்த மாதங்களில் ரசிகர்களுக்கு திரையில் பெரிய விருந்து கொடுக்க காத்திருக்கிறார் ஜெயம் ரவி.

பெப்ரவரி மாதம் காதலின் மாதம் என்பதால் ஜெயம் ரவி காதலிக்க காதல் சின்னம் தேடுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் ஹார்ட்டீன்களையும் குவித்து வருகின்றனர்.

Similar Posts