செய்திகள்

என்ன மாதிரி மட்டும் பண்ணிடாதிங்க…! வேண்டுகோள் வைக்கும் பவி

நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

சமீப காலமாக பவித்ரா,, முன்பு இருந்ததை விட உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,நான் அதிக எடையை இழந்து விட்டேன். ஆனால், அதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை வேலை பளு காரணமாகவும் எனக்கு இருக்கும் சில தனிப்பட்ட வேலைகள் காரணமாகவும் என்னால் சரியாக தூங்க முடியவில்லை.

சரியான நேரத்தில் சாப்பிட முடியவில்லை. சூட்டிங் காரணமாக அதிகம் பயணம் செய்வதால் என்னால் உடற்பயிற்சிகளையும் செய்ய முடியவில்லை. இது கண்டிப்பாக ஆரோக்கியமான விஷயம் கிடையாது தான். ஆனால், விரைவில் நான் நல்ல உடல் மற்றும் மன பலத்துடன் வருவேன் என்று நம்புகிறேன். உடல் எடையை குறைப்பது எப்படி என்று என்னிடம் கேட்கும் பலருக்கும் நான் சொல்ல விரும்புவது. என்னை மட்டும் பின்பற்றாதீர்கள். தயவு செய்து ஒழுங்காக சாப்பிட்டு ஒழுங்காக தூங்கி சரியான நேரத்தில் வேலை செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Similar Posts