செய்திகள்

இளையராஜாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜேசுதாஸ் இந்த பாடலை என்னால் பாட முடியாது | K. J. Yesudas I Can’t Sing This Song Shocked Ilaiyaraaja

அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகாடிங் பாடல் எல்லாம் தயார்.
கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகாடிங் செய்து பார்த்தார். பாடல் நன்றாக வந்திருந்தது.நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

K. J. Yesudas I Can’t Sing This Song Shocked Ilaiyaraaja


அடுத்த நாள் ரெக்கார்டிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார்.
அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, “இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டு கொள்ளுங்கள்” என கூறி சென்றார். பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது.நேராக இளையராஜாவிடம் சென்றார். இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறினார்.

K. J. Yesudas I Can’t Sing This Song Shocked Ilaiyaraaja


அதிர்ச்சி அடைந்த இளையராஜாவிடம் ஜேசுதாஸ் கூறியது இந்த பாடலை
“இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக பாட முடியுமா என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்” என்று கூறினார். இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாடலை பாட மறுத்து, இளையராஜாவின் குரலில் அந்த பாடலை வெளிவரவைத்தர் கே.ஜே.ஜேசுதாஸ். அது தான் இந்த “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ”
பாடல்….

Similar Posts