சீறிப் பாயும் காரி திரை விமர்சனம்..!(Kaari Movie review)

சசிகுமார் நடித்த நான் மிருகமாய் மாற படம் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் காரி.
படக்குழு

இயக்கம்:
இயக்குனர் ஹேமந்த்
தயாரிப்பு:
எஸ்.லக்ஷ்மன் குமார்
வெளியீடு:
பிரின்ஸ் பிக்சர்ஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
சசிகுமார், ஆடுகளம் நரேன், பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல்
இசை:
டி இமான்
படத்தின் கதை
படத்தின் தொடக்கத்தில் ராமநாதபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை அரசாங்கம் குப்பை கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது, இதற்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மறுபுறம் சென்னையில் சசிகுமார் மற்றும் அவரது அப்பா நரேன் ரேஸ் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். இன்னொரு புறம் பிரபலமான விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை ருசித்து சாப்பிடுகிறார் கார்ப்பரேட் வில்லன். இந்த மூன்றையும் ஒன்றிணத்ததே காரி திரைப்படம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனேந்தல் என இரண்டு கிராமங்களுக்கும் பொதுவாக கருப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தை யார் நடத்துவது என மோதல் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் கோவில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. இருவருக்குமே பொதுவான கருப்பன் கோவில் நிர்வாகத்தின் மீது வெற்றி பெற்றவர் அதிகாரம் பெற அனுமதிக்கப்படுகிறார்.
இதற்காக, போட்டிக்கான களம் சூடுபிடிக்க, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு காளைகளை அடக்க, காரியூரை பூர்விகமாக கொண்டு சென்னையில் வாழும் சேதுவை (சசிகுமார்) நாடுகிறார்கள் ஊர் பெரியவர்கள். சென்னையில் குதிரை பந்தய தொழுவத்தில் பணிபுரியும் ஜாக்கியான சேது (சசிகுமார்) என்பவரும் நமக்கு அறிமுகமாகிறார். அவருடன் தொழுவத்தில் பணிபுரியும் அவரது தந்தை வெள்ளசாமி (ஆடுகளம் நரேன்) சமூகப் பொறுப்புள்ள மனிதர் மற்றும் தவறு செய்பவர்களைக் கேள்வி கேட்காமல் இருப்பவர்.
இதற்கிடையில், இறைச்சி வியாபாரம் மற்றும் விலங்குகளைச் சுரண்டுவதில் ஈடுபடும் கார்ப்பரேட் மன்னன் எஸ்கேஆர் (ஜேடி சக்ரவர்த்தி) பற்றிய ஒரு பார்வையும் நமக்குக் கிடைக்கிறது. எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும் சேதுவின் வளர்ப்பு குதிரை சுட்டுக் கொல்லப்பட்ட சில நிமிடங்களில் அவனது தந்தை மாரடைப்பால் இறந்தபோது சேதுவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.
அந்த திருப்பம் என்ன? கரியலூர் மற்றும் சேது மக்களை ஒன்றிணைப்பது எப்படி, எஸ்கேஆரின் வணிகம் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதுதான் மற்ற முக்கிய கதையாகும்.
திறமையின் தேடல்
வழக்கம்போல் இல்லாமல் தன்னுடைய நடிப்பு ஆற்றலை சசிகுமார் திறமையாக இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்காக எழுதப்பட்ட கதை ஆகவே இந்த படம் இருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவை இல்லை என்றாலும் படம் காட்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சசிகுமார்.
கதாநாயகி பார்வதி அருண் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார்.

கதாநாயகன் சசிகுமாரின் அப்பாவாக ஆடுகளம் நரேன், ஊர் பெரியவராக நாகி நீடு அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். அம்மு அபிராமி, ராம்குமார், ரெடின் கிங்ஸ்லி சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.
அவரை தொடர்ந்து அப்பாவாக பாலாஜி சக்திவேல் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் இயக்குனர் ஹேமந்த். இயக்குனர் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தையும், மக்களின் நிலைமையும் அழகாக எடுத்துக்க் காட்டியிருக்கிறார்.
இதற்கு பக்கபலமாக இமானின் பின்னணி இசை இருந்திருக்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே அருமையாக வந்திருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் படத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு.
படத்தின் சிறப்பு
சசி சசிகுமாரின் நடிப்பு சிறப்பு
திரைக்கதையை இயக்குனர் கொண்டு சென்ற விதம்
ஒளிப்பதிவும் பின்னணி இசையும்
எமோஷனல் காட்சிகள் அருமை
படத்தின் சொதப்பல்கள்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
படம் முழுவதும் எமோஷனல் காட்சி.
மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை.

மதிப்பீடு: 3/5
ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்க கூடிய நன்மைகளை மிக விளக்கமாக சொல்லியிருக்கிறது இந்த காரி. காரி – இன்னும் கொஞ்சம் பாய்ந்திருக்கலாம் சீறி…
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.