எதிர்பார்ப்புகளுக்கு இடையே கலகத் தலைவன் திரைவிமர்சனம்..! (Kalaga thalaivan movie review)
கலக தலைவன் தமிழ்த் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.இது ஒரு தீவிரமான ஆக்ஷன்-த்ரில்லர் படமாம். அப்படியா..?வாங்க கதைய பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:
மகிழ் திருமேனி
தயாரிப்பு:
உதயநிதி ஸ்டாலின்
வெளியீடு:
ரெட் ஜெயண்ட் மூவிஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக் பாஸ் ஆரவ், கலையரசன், அங்கனா ராய்
இசை:
ஸ்ரீகாந்த் தேவா, அரோல் கொரேல்லி
படத்தின் கதை
படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் ஒரு நிதி ஆய்வாளராக பணியாற்றிக்கொண்டு தனது வாழ்வை மகிழ்வாக களித்து வரும் நிலையில் திடீரென 4 பேர் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்கிறார். இது தொடர்ந்து நடக்க அதனை அலசி ஆராயும் கதை ஒருபுறம் இருக்க,

வஜ்ஜிரா என்ற ஒரு கம்பெனி. அது அதிக ஹெவியான வாகனங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். அவர்களின் தொழில் நன்றாக சென்றுகொண்டிருக்கும் போது அடுத்த 45 நாட்களி அவர்களுடைய கம்பெனியில் ஒரு புதிய வாகனத்தை அறிமுகப்படுத்த போவதாகவும் உலகிலே பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக இருக்கும் வாகனமாகவும் அது இருக்கும் எனவும் கூறுகிறார்கள். இதனால் கம்பெனிக்கு அதிக ப்ரோபிட்டும் சேல்சும் எகிறிக்கொண்டு செல்கிறது.
இந்நிலையில் அவர்களுக்கு தெரிய வரும் விஷயமாவது இந்த வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை அதிகமான காற்று மாசுவை உண்டாக்கும் என்பதாகும். இதனை மேலாளர்கள் மறைத்து அவர்கள் வெளியே கசியவிடாமல் பார்த்துகொண்டிருக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் இந்த விஷயம் லீக் ஆகி, மீடியா வரை செல்கிறது. அது மட்டுமன்றி எல்லா தொலைக்காட்சிகளிலும் தலைப்பு செய்தியாக ஓடுகிறது.

இதனால் ஆத்திரமடையும் கம்பெனி முதலாளி நமக்கு தெரிந்த விஷயம் எப்படி வெளிய செல்ல வாய்ப்பிருக்கும், அதனால் எங்களின் கூட்டத்தில் ஒருவராக தான் இருக்கும் என நினைத்து அவரை கண்டு பிடிக்க, வெளியில் இருந்து ஒருவரை தொடர்பு கொள்கிறார். அவர் தான் ஆரவ்.
அடிகொடூரமான முறையில் விசாரித்து பல உண்மைகளை வாங்கி வரும் ஆரவ், இறுதியில் கலகத்திற்கும் காரணம் யார், ஒரு கும்பல் ஏன் பெண்களை கடத்துகிறது.? அந்த கொம்பெனிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்..? இதற்கும் உதயநிதிக்கும் என்ன சம்மந்தம்? உதயநிதி ஆரவ்வை தண்டனைக்கு உட்படுத்தினாரா என்பதே கதையாகும்..
திறமையின் தேடல்
பரபரப்பாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. புதிய கதைகளத்தில் அட்டகாசமாக பண்ணியுள்ளார். சிறந்த திரைக்கதை, அற்புதமான எழுத்து மற்றும் வலுவான செய்தியுடன் கூடிய சிறந்த மற்றும் தீவிரமான படம் என்ற கருத்தை தந்துள்ளார்.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவனில் மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார். கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பையும், மிரட்டலான ஆக்ஷனையும் அசால்டாக செய்துள்ளார்.

ஆரவ் நடிப்பு நன்றாக உள்ளது.வில்லனாக அனைவரையும் மிஞ்சும் மிரட்டியிருக்கிறார். கொடூரமாக வேட்டையாடும் ஆரவ்வின் நடிப்பு படத்திற்கு பலம். நடிப்பும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதாநாயகி நிதி அகர்வாலும் நடித்தது ஓகே தான் தேவையானதை செய்துள்ளார். ஆனால் ஹீரோயின் காட்சிகள் மொக்கையாம். சில லவ் பீல் காட்சிகள் கொஞ்சம் படத்தை நகர்த்தி விட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் நண்பராக வரும் கலையரசனின் நடிப்பு சிறப்பு. உதய் நடிப்பு அருமை. ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம். தில்ராஜின் ஒளிப்பதிவு படத்தை தாங்கி நிற்கிறது. ஸ்ரீகாந்தின் எடிட்டிங் நன்றாக உள்ளது. ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. இருந்தாலும் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை சேர்க்கிறது. தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பு சிறப்பு.
படத்தின் சிறப்பு
உதயநிதி ஸ்டாலின் நடிப்பு மற்றும் வில்லனாக மிரட்டும் ஆரவ் நடிப்பு
மகிழ் திருமேனியின் புதிய கருத்துள்ள கதைக்களம்
முதல் பாதி மற்றும் இடைவேளி காட்சி
ரயில் நிலைய காட்சி

படத்தின் சொதப்பல்கள்
தடம் படம் அளவில் விறுவிறுப்பு குறைவு.
காதல் காட்சிகள், ஹீரோயின் வரும் சீன்கள்
இசை அவ்வளவாக இல்லை.
மதிப்பீடு: 3/5
கலகத் தலைவன் படத்தில் ஒன்றிரண்டு நெகடிவ் இருந்தாலும் நிறைய ட்விஸ்டுகளுடன் காணப்படும் இந்த படத்தை அமர்ந்திருந்து பார்க்கலாம். புதிய கதைகளத்தை தந்த இயக்குனர் மற்றும் நடிகருக்கு வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.