நேர்காணல்கள் | செய்திகள்

கலகத்தலைவன் வில்லன் ஆரவ் நேர்காணல்..!(Kalakathalaivan villain Aarav interview)

பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னராக பிரபலமானவர் ஆரவ். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் படத்திலும் வில்லனாக ஆரவ் களமிறங்கி உள்ளார்.இந்த நிலையில், கலகத் தலைவன் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவலை Behindwoods நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில், “சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால் அடுத்து என்ன செய்வதென்று குழப்பம் இருந்தது. கொரோனா பேரிடர் சமயத்தில் சில ஆன்லைன் கோர்ஸ்கள் கூட படிக்க தொடங்கினேன். வெளிநாடு போய் வேலை செய்ய விசா விண்ணப்பிப்பது உள்ளிட்ட விஷயங்களிலும் ஈடுபட்டேன்.

ஆனால், எனது மனைவியோ, நீ எதுக்கு இப்போ இத பண்ணிட்டு இருக்கே, உனக்கு எதுவுமே ஆகலேயே. உனக்கு ஒரு படம் வரும், நீ பண்ணுவே. பாப்போம். அதன் பிறகு ஒரு முடிவு எடுப்போம்’ என கூறினார். இதன் பின்னர், கலகத்தலைவன் படத்தில் வில்லன் வாய்ப்பு வந்தது.

முன்னாடியே பலரும் நான் வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி இருந்தார்கள். ஆனால் ஹீரோவாக நடிக்க வேண்டும் என இருந்தேன். மகிழ் சார் என வரும் போது எனது ட்ரீம் இயக்குனர். அவருடன் பணியாற்ற வேண்டும் என இருந்தது. முதலில் நான் வேண்டாம் என இருந்தேன். பின்னர் பலரும் கருத்து கூறினார்கள். அப்பா இறந்த சமயத்தில், எனக்காக டீம் காத்துக் கொண்டிருந்தது.

நான் ஊரில் இருப்பது பற்றியும், வர டைம் ஆகும் என்றும் மகிழ் சாரிடம் அழைத்து விவரத்தை சொன்னேன். அதனால், எனக்காக காத்திருக்க வேண்டாம். வேறு யாரையாவது வைத்து எடுங்கள் என்றும் கூறினேன். ஆனால், ‘இல்ல நீங்க போயிட்டு வாங்க, உங்களுக்காக வெயிட் பண்றேன்.

Kalakathalaivan villain Aarav

உங்கள பாத்துட்டு எனக்கு புடிக்கலன்னா, வேறு யாரையாவது நடிக்க வைக்கிறேன்’ என மகிழ் சார் கூறினார். அது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.” என ஆரவ் கூறியுள்ளார்.இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ஆரவ் வரும் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Similar Posts