செய்திகள் | திரைப்படங்கள்

கருமேகங்கள் கலைகின்றன படத்தின் முதல் பார்வையை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். | Kamal Haasan has released the first look of Karumegangal Kalaiginrana

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் முதல் பார்வையை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடித்த அழகி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தங்கர் பச்சான். தொடர்ந்து சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் போன்ற தரமான படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது பாரதிராஜா, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ளார்.

Kamal Haasan has released the first look of Karumegangal Kalaiginrana

அழகி இயக்குநர் தங்கர் பச்சான் பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி திரைப்படம் மூலம் இயக்குநரானவர் தங்கர் பச்சான். முதல் காதல், காதல் தோல்வி என காதலின் யதார்த்தத்தை மிக நுட்பமாக விவரித்த இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனித உறவுகளை பின்னணியாக வைத்து சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற அழுத்தமான படங்களை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டது குறித்து தங்கர் பச்சான் போட்டுள்ள முகநூல் பதிவு வைரலாகி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தங்கர் பச்சான் இயக்கியுள்ள படம் கருமேகங்கள் கலைகின்றன. வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல், ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார், இதில் கவிஞர் வைரமுத்துவும் பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் தோற்றம் வெளியீடு கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. சிறுகதை ஒன்றை தழுவி உருவாக்கப்படும் இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கருமேகங்கள் கலைகின்றன படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் கமலுடன் பாரதிராஜாவும் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

தங்கர் பச்சான் நன்றி கருமேகங்கள் கலைகின்றன ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் கமல், பாரதிராஜா இருக்கும் புகைப்படங்களை இயக்குநர் தங்கர் பச்சான் தனது முகநூலில் ஷேர் செய்துள்ளார். மேலும், “எங்கள் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை மனம் உவந்து வாழ்த்தி வெளியிட்ட உலக நாயகன் கமல்ஹாசனுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்” என பதிவிட்டுள்ளார்.

கமல் – பாரதிராஜா கூட்டணி இயக்குநர் பாரதிராஜாவுக்காக கருமேகங்கள் கலைகின்றன ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல் – பாரதிராஜா கூட்டணியில் வெளியான 16 வயதினிலே தமிழ்த் திரையுலகில் கிளாசிக் படமாக அமைந்தது. தொடர்ந்து இந்தக் கூட்டணியில் வெளியான சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி போன்ற படங்களும் மிகப் பெரிய ஹிட் அடித்தன. அதன்பிறகு இணையாத இக்கூட்டணி தற்போது கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar Posts