செய்திகள்

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கமல்ஹாசன் புகைப்படம் | Kamal Haasan’s photo from the sets of Indian 2

தமிழின் முன்னணி இயக்குனரான ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும் மற்றும் இந்தியன் 2 படத்தினையும் இயக்கி வருகிறார்.

Kamal Haasan’s photo from the sets of Indian 2

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

Kamal Haasan’s photo from the sets of Indian 2

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர், அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்தியன் 2 ஷூட்டிங்கில் இருந்து நடிகர் கமல்ஹாசன் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கல்பாக்கம் டச்சுக் கோட்டையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு கூடியிருந்த ரசிகர்களை காண கமல்ஹாசன் வருகை தந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இது அமைந்துள்ளது. மேலும் டச்சுக் கோட்டையில் சண்டைக் காட்சி வல்லுநர்கள் உடன் கமல் கலந்துரையாடல் செய்வது போல புகைப்படமும் வெளியாகி உள்ளது.

Similar Posts