கமல் – சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ் குமார். | Kamal – Sivakarthikeyan joining hands with GV Prakash Kumar for the first time.
கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்கள் அடுத்தடுத்து வெளியானதை போல, இந்தாண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ளன. இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது.

கதாநாயகன், கதாநாயகி யார் என்று அறிவித்த பின் இதுவரை படத்திற்கு இசையமைக்க போவது யார் என்று தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல முன்னணி நட்சத்திரமான ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கவுள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்முலம் கமல் மற்றும் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக கைகோர்க்கிறார் ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.