செய்திகள் | திரை விமர்சனம்

கணம் திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்(Kanam Movie Review)

Kanam Movie Review

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் அமலா, சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கணம் திரைப்படம் உருவாகியுள்ளது.எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் மீண்டும் தமிழில் நடித்துள்ள கணம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை வாங்க பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:

ஸ்ரீ கார்த்திக்

தயாரிப்பு:

எஸ்.ஆர். பிரபு
எஸ்.ஆர். பிரகாஷ்பாபு

வெளியீடு:

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

ஷர்வானந்த்,ரிது வர்மா ரிதுவர்மா அமலா அக்கினேனி,சதீஷ்,நாசர்
ரமேஷ் திலக்

இசை:

ஜேக்ஸ் பிஜாய்

படத்தின் கதை

டைம் மிஷன், டைம் டிராவல் கான்செப்டை கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த பாணியில் இன்று நேற்று நாளை, 24 ஆகிய படங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது கணம் படமும் வெளியாகி இருக்கிறது. ஒரு அறிவியல் புனைப்பு கதையில் அம்மா சென்டிமென்ட்டை இணைத்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கார்த்தி. படத்தில் ஷர்வா சிறுவயதிலேயே தன்னுடைய தாயை இழந்து விடுகிறார். இவருடைய நண்பர்களாக சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் இருக்கிறார்கள்.மூவருமே ஒன்றாக தான் வளர்கிறார்கள். இசை கலைஞர் ஆக வேண்டும் என்பது தான் அவருடைய லட்சியம். இந்த சூழ்நிலையில் டைம் மிஷன் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக நாசர் அறிமுகம் ஆகிறார். இவர்கள் மூவரும் நாசரை சந்திக்கிறார்கள். அம்மா ஏக்கத்தில் இருக்கும் ஷர்வா டைம் மிஷன் மூலம் இறந்த காலத்திற்கு சென்று அம்மாவின் மரணத்தை தடுக்க முயற்சிக்கிறார். அவருடன் அவருடைய நண்பர்கள் சதீஷ், ரமேஷ் திலக்கும் கடந்த காலத்திற்கு பயணிக்கிறார்கள்.

Kanam Movie Review

அதோடு ரமேஷ் திலக், சதீஷ் இருவருக்கும் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கிறது. மூவருமே நிகழ்கால பிரச்சனைகளை எல்லாம் கடந்த காலத்திற்கு சென்று மாற்றி விடலாம் என்று நினைத்து செல்கிறார்கள். அம்மாவின் விபத்தை ஷர்வா தடுத்தாரா? இல்லையா? இதனால் ஷர்வா வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை. எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷர்வா தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எப்படியாவது அம்மாவை மரணத்திலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்ற அம்மா மகன் பாச போராட்டத்தை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். 30 வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அமலா. 90களில் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் அமலா. இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷர்வாவின் ஜோடியாக ரிது வர்மா நடித்திருக்கிறார். இவர் சில காட்சிகளில் வந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

Kanam Movie Review

இவர்களை அடுத்து சதீஷ், ரமேஷ் திலக் இருவரும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். படத்திற்கு இவர்களுடைய கதாபாத்திரம் பக்க பலம் என்று சொல்லலாம். இன்னும் இவர்களுடைய காமெடி காட்சிகளில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம். விஞ்ஞானியாக நாசர் தன்னுடைய அனுபவ நடிப்பை காண்பித்திருக்கிறார். டைம் டிராவல் தமிழ் சினிமாவுக்கு புதிது இல்லை. இருந்தாலும், இந்த படத்தை மிக எமோஷனலான பயணமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கார்த்தி. டைம் ட்ராவல் படத்திற்குள் அழகான உணர்வுகளை பொருத்தி சில இடங்களில் கிளாப்ஸ்களையும் வாங்கி இருக்கிறது.

Kanam Movie Review

கடந்த காலத்துக்கு வரும் ஹீரோவும், அவருடைய நண்பர்களும் தங்களுடைய சிறு வயது வெர்ஷன்களை சந்திப்பதும், பேசுவதும் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஆனால், படம் முழுக்க முழுக்க எமோஷனலாகவே நகர்வதால் படத்தில் பெரிய சவால்களும் சுவாரசியமும் எதுவும் இல்லை. இதுவே படத்தின் குறை என்று சொல்லலாம். நாசரும் ஷர்வனந்தும் சந்திக்கும் வரை கதை பொறுமையாக தான் சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு பின் தான் கதையில் வேகம் வருகிறது. படத்தின் கிளைமாக்ஸ் வரும் மெசேஜ் சிறப்பாக இருக்கிறது.

படத்தின் சிறப்பு

ஷர்வா தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கமாக உள்ளது.

டைம் ட்ராவல் கான்செப்ட் நன்றாக இருக்கிறது.

அம்மா மகன் சென்டிமென்ட்.

படத்தின் சொதப்பல்கள்

படம் முழுக்க முழுக்க எமோஷனலாகவே செல்கிறது.

படத்தின் முதல் பாதி மெதுவாக சென்று கொண்டிருக்கின்றது.

காமெடி காட்சிகளை இன்னும் வைத்து இருக்கலாம்.

சுவாரசியமும் விறுவிறுப்பும் காண்பித்திருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.

மதிப்பீடு: 3/5

 கணம் கதையமைப்பில் தனித்துவம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts