செய்திகள்

சந்திரமுகி2 படபிடிப்பை நிறைவு செய்த கங்கனா ரனாவத் | Kangana Ranaut completed the shoot of Chandramukhi2

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், சந்திரமுகி இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

தமிழில் முதல் பாகம் கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, கே.ஆர்.விஜயா, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம் சந்திரமுகி.

தற்போது இரண்டாம் பாகம் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வடிவேலு, ராகவா லாரன்ஸ், ராதிகா, கங்கனா ரனாவத் போன்ற பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் மத்தியில் வைரலாக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது கங்கனா ரனாவத் தன்னுடைய பட்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

Kangana Ranaut completed the shoot of Chandramukhi

இதனை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளர்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Similar Posts