பிலிம்பேர் விருதை வாங்க மறுத்த கங்கணா..!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான `தலைவி’ படத்தில் நடித்திருந்தார் கங்கனா.
இத்திரைப்படத்தில் நடித்ததற்காக கங்கனா ரனாவத் வரப்போகும் 67-வது பிலிம்பேர் விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியிருந்தார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தது, “கடந்த 2014 முதல் நெறிமுறையற்ற, ஊழல் மற்றும் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வரும் பிலிம்பேர் விருதுகள் போன்றவற்றை நான் தவிர்த்து வருகிறேன்.
அதில் நான் பங்கேற்பது எனது தொழில் தர்மத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தார்.
எங்கள் மீது குற்றச்சாட்டு வைத்த கங்கனா ரனாவத் மீது சட்ட நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது”, என பிலிம்பேர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுள்ளது.
கங்கனா ,“பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து எனது பெயர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த இந்த சிஸ்டத்திற்கு எதிரான எனது நிலைப்பாட்டில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இருப்பினும் பிலிம்பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
