கண்ணை நம்பாதே திரைப்படத்தின் திரைவிமர்சனம் | Kannai Nambathey movie review
இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு
இயக்கம்:
மு. மாறன்
தயாரிப்பு:
வி.என்.ரஞ்சித் குமார்
வெளியீடு:
ரெட் ஜெயண்ட் மூவிஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
உதயநிதி ஸ்டாலின்,பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா, சுபிக்ஷா
இசை:
சித்து குமார்
படத்தின் கதை
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார்.வீட்டிற்கு வந்த அதே நாள் இரவில் பிரசன்னா, உதயநிதியை சரக்கு அடிக்க வாருங்கள் என அழைக்கிறார். தனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லை என உதயநிதி கூற சரக்கடிக்கும் பழக்கம் இருக்கும் உதயநிதி நண்பன் சதீஸ் இவர்களுடன் இணைகிறார்.

மூவரும் பாருக்கு சென்ற நேரத்தில் கார் ஓட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பூமிகாவை வீட்டில் கொண்டு விட்டு உதவி செய்கிறார் உதயநிதி. உதவி செய்ததற்கு கைமாறாக அவர் தனது காரை கொடுத்து, காலையில் கொண்டு வாருங்கள் என்று அனுப்புகிறார். அவர் சொன்னபடியே காரை கொண்டு செல்லும் உதயநிதி காலையில் காரை எடுக்கச் செல்லும் போது காரின் டிக்கியில் பூமிகா பிணமாக இருப்பது போன்று காட்சி படுத்தப்படுகிறது.

அவர் எப்படி இறந்தார்? இதற்கும் உதயநிதியுடன் இருக்கும் பிரசன்னாவிற்கும் என்ன சம்பந்தம்..? இந்த பிரச்சினையில் ஸ்ரீகாந்த் எப்படி மாட்டினார் உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை திரில்லிங்காக சொன்னால் அதுதான் கண்ணை நம்பாதே படத்தின் கதை.
படத்தின் சிறப்பு
கதாநாயகன் உதயநிதி சிறப்பாக நடித்துள்ளார். கொலையை யார் செய்தது, இதன் பின்னணி என்ன என்று தேடும் உதயநிதியின் நடிப்பு படத்திற்கு பலம்.
உதயநிதியின் நடிப்பில் வழக்கம் போல எந்த வித மாற்றமும் இல்லை. பிரசன்னா கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார்.
படத்தின் சொதப்பல்கள்
பல இடத்தில் லாஜிக் மிஸ்டேக் எளிதளவில் சஸ்பென்சை கண்டுபிடிக்க முடிகிறது.
உதயநிதி, பிரசன்னா, பூமிகா என நடிகர்களை பொருத்தவரையில் திரில்லர் படத்திற்கு தேவையான சீரியஸை காடிகளில் கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஒரு கொலையை பார்க்கும் இடங்களில் இவ்வளவுதான் அதிர்ச்சியா? என்றும் ஒரிரு இடங்களில் தோன்ற வைக்கிறது.
மதிப்பீடு: 2.25/5
மு.மாறனின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் பிடித்தவர்களுக்கு நிச்சயம் இந்த கண்ணை நம்பாதே படமும் பிடிக்கும்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.