400 கோடி வசூல் செய்த காந்தாரா படத்தின் பாடல் தடை நீக்கம்..!( Kantara song, which collected 400 crores, has been removed)
ரூ.16 கோடி செலவில் தயாரான காந்தாரா படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. படத்தின் கிளைமாக்சில் இடம்பெற்ற வராஹ ரூபம் பாடலுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் தங்களது நவரசம் பாடலை காப்பியடித்து காந்தாரா படத்தில் வராஹ ரூபம் பாடலை உருவாக்கி இருப்பதாக கேரளாவை சேர்ந்த பிரபல இசைக்குழு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாடலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஓ.டி.டி. தளத்தில் வராஹ பாடல் இல்லாமலேயே காந்தாரா படம் வெளியானது. தற்போது பாடலுக்கான தடையை பாலக்காடு நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டு உள்ளது.
