நடிகை சில்க் ஸ்மிதா போல போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh posed as actress Silk Smita
நடிகர் நானியின் பான் இந்தியா திரைப்படம் ‘தசரா’. ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

இப்படத்தில் நானி & கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் கதாநாயகன் நானி & கதாநாயகி கீர்த்தி சுரேஷ் இருவரும் ஐத்ராபாத் நகரில் உள்ள சுதர்சன் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை சில்க் ஸ்மிதா போல போஸ் கொடுத்து படப்பிடிப்பு தள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தசரா படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும். அந்த செட்டின் கீழ் நின்று கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.