செய்திகள்

கீர்த்தி சுரேஷ்ன் வைரல் புகைப்படங்கள் | Keerthy Suresh Viral Photos

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவரே நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Viral Photos

இவர் தமிழ் சினிமாவில் ஒரு வாரிசு நடிகையாக அறிமுகமானவர். அதாவது பிரபல நடிகை மேனகாவின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் முதன்முதலில் மலையாளத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நடிகையாக அறிமுகமான கீர்த்தி சினிமாவில் உள் நுழைந்து குறுகிய காலத்திலேயே பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். அந்தவகையில் 2015 இல் வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் முதல் படம் தோல்வியை சந்தித்தாலும் இவர் அடுத்தடுத்து நடித்த ‘ரெமோ, ரஜினி முருகன்’ போன்ற படங்கள் பெரியளவில் ஹிட்டை பெற்றுக் கொடுத்தன.

திலும் குறிப்பாக நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி என்ற படத்தில் இவரின் நடிப்பு உலகளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்காக தேசிய விருதையும் வென்றிருக்கின்றார். இந்தப் படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து விஜய், ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடிக்கத் தொடங்கினார்.

தற்போது கூட இவரின் கைவசம் ‘மாமன்னன், சைரன், ரகு தாத்தா’ போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கின்றார். அத்தோடு நடிகர் நானிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts