கே.ஜி.எஃப் 1, 2, காந்தாரா தயாரிப்பு நிறுவனத்தின் பக்கா பிளான்..!(KGF and Gandhara Productions’s master Plan)
முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 1, 2, காந்தாரா உள்ளிட்ட படங்கள் வசூலை வாரி குவித்தது.
இந்த நிலையில் ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அழுத்தமான படங்களைத் தயாரிப்பதாக உறுதியளிக்கிறோம்.
இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, பொழுதுபோக்கு துறையில் நிலையான வளர்ச்சிக்காக வரும் 5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய உறுதியளிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
