ஐபிஎல் போட்டியை காண குவிந்த கோலிவுட் பிரபலங்கள் | Kollywood celebrities thronged to watch the IPL match.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இரு மாதங்களாக நடைபெற்று வருகின்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தல தோனிக்காக மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் படை திரண்டு வருகின்றனர்.

போட்டியை பார்க்க கோலிவுட் திரை நட்சத்திரங்கள் சேப்பாக்கத்தில் குவிந்தனர். இதில், எப்போதும் போல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனும் சேப்பாக்கம் மைதானம் வந்திருந்தனர். அவர்களது அருகே ராக்ஸ்டார் அனிருத், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தனர்.

அதேபோல், இன்னொரு வரிசையில் ஜெயம் ரவி தனது குடும்பத்தினருடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வந்திருந்தார். ஜெயம் ரவி, அவரது மனைவி, மகன்கள் என மொத்த குடும்பமும் மிக உற்சாகமாக போட்டியை பார்த்து ரசித்தனர்.

மறுபுறம் நகைச்சுவை நடிகர் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆர்ஜே பாலாஜி என பல நட்ச்சத்திரங்கள் போட்டியைப் பார்க்க குவிந்தன.










