Kovai Guna passed away, who was famous in Asatha Povathu Yaaru? | அசத்தப்போவது யாரு புகழ் கோவை குணா காலமானார்
கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு என சின்னத்திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த கோவை குணா உடல் நலக் குறைவால் காரணமாக காலமானார்.

சின்னக் கலைவாணர் விவேக், பாண்டு, சமீபத்தில் மயில்சாமி என தொடர்ந்து நகைச்சுவை நடிகர்களின் மறைவுச் செய்தி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி வரும் நிலையில், இன்னொரு நகைச்சுவை நடிகரின் மறைவு செய்தி ரசிகர்களை மீண்டும் அழ வைத்துள்ளது. விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கோவை குணா.

கொரோனா நோய் பரவல் தொடங்கிய நேரத்திலேயே சொந்த ஊரான கோவைக்கே சென்று செட்டில் ஆகி விட்டார் கோவை குணா.

கலக்கப் போவது யாரு மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்களை வார வாரம் சிரிக்க வைத்த கோவை குணா, உடல் நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோவை குணா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.