செய்திகள் | திரைப்படங்கள்

லால் சலாம் படப்பிடிப்பு ஆரம்பம் | Lal Salaam Shoot starts today

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடிக்க உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

Lal Salaam Shoot starts today

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியாகி வெகு நாட்கள் ஆன நிலையில், இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. லால் சலாம் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அப்பா ரஜினிகாந்த் உடன் திருப்பதி, மசூதிகளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்று வந்த புகைப்படங்களும் வெளியாகின.

Lal Salaam Shoot starts today

மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனாலும், இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமாகவே ப்ரோமோட் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

முன்னாள் கணவர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இரு படங்களும் கலவையான விமர்சனத்துடன் சுமாராகவே ஓடின. 3 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், அந்த படத்தின் பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்தன. இந்நிலையில், பல வருடங்களுக்கு பிறகு லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் தான் லால் சலாம் படத்தில் கதாநாயகர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் விஷ்ணு விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டது என்றும் விஷ்ணு விஷால் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என வதந்திகள் பரவின. இந்நிலையில், இன்றைய போஸ்டரில் தெள்ளத் தெளிவாக விஷ்ணு விஷால் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Similar Posts