திரை விமர்சனம் | செய்திகள்

நடிகர் விஷாலின் லத்தி பேசியதா..? லத்தி திரை விமர்சனம்..!(Laththi movie review)

Laththi movie review

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷாலின் லத்தி திரைப்படத்தில் கம்பேக் கொடுத்தாரா..? இப்படம் பல மொழிகளில் இன்று வெளியாகியது. அது மட்டுமன்றி நடிகர் விஷால் பல இடங்களில் ப்ரமோஷனிலும் கலந்துக் கொண்டார். நடிகர் பொலீஸ் அதிகாரியாக மிரட்டிய லத்தி படம் சொதப்பலா..? மிரட்டலா..? என வாங்க பார்க்கலாம்.

படக்குழு

Laththi movie review

இயக்கம்:

வினோத் குமார்

தயாரிப்பு:

ரமணா
நந்தா துரைராஜ்

வெளியீடு:

ரெட் ஜெயண்ட் மூவி

முக்கிய கதாபாத்திரங்கள்:

விஷால், சுனைனா, பிரபு, மாஸ்டர் லிரிஷ் ராகவ், தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், ரமணா, வினோத் சாகர்,

இசை:

யுவன் சங்கர் ராஜா 

படத்தின் கதை

விஷால் { கான்ஸ்டபிள் முருகானந்தம் } அவருடைய மனைவி சுனைனா மற்றும் 10 வயது மகன் என தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர் 1 வருடம் இடைக்கால நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஆவார். அதற்கு காரணம்

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு இறந்து விடுகிறார். அதனை விசாரணை செய்ய விஷால் ஒரு பையனை லாக்கப்பில் வைத்து அடித்து உதைக்கிறார். ஆனால் அந்த பையன் தவறு செய்யாததால் அடித்த குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையில் தனது மகன் பாடசாலையில் தனது அப்பா பொலிஸ் அதிகாரி என தெரிவித்து பெருமிதம் கொள்கிறான். பாடசாலைக்குள் வருவதென்றால் பொலிஸாக தான் வர வேண்டும் எனவும் நிபந்தனையுமிடுகிறான். நடிகர் விஷால் பல அதிகாரிகளை சந்தித்தும் மன்னிப்பு கேட்டும் வேலை திரும்ப கிடைக்கவில்லை.

Laththi movie review

மற்றொரு புறம் சென்னையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகவும் செல்வாக்கு மிக்க குண்டர் மற்றும் அரசியல்வாதி சூராவின் மகன் வெல்ல (ரமணா) டி.ஜி.பி கமலின் (பிரபு) மகளிடம் தகாத முறையில் நடந்துகொள்கிறார். இதை அவர் தனது தந்தை பிரபுவிடம் கூற, டி.ஜி.பியாக இருந்தும் தாதா மகனை பிரபுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கிடையில் விஷாலுக்கு தெரிந்த உயர் அதிகாரியின் நண்பரான டிஐஜி கமல் (பிரபு மூலம் 6 மாதத்திற்குள் மீண்டும் காக்கி அணிந்து வேலையில் சேருகிறார் விஷால்.

இந்த சமயத்தில் வெல்ல (ரமணா) தனியாக பிரபுவிடம் சிக்கிக்கொள்கிறார். வெள்ளையை அப்படியே கடத்தி யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் கொண்டு செல்கிறார் பிரபு. அவனை அடித்து நடக்க முடியாமல் செய்யவேண்டும் என்பதற்காக லத்தி ஸ்பெஷலிஸ்ட் விஷாலை வரவைகிறார்.

Laththi movie review

விஷாலும் வெல்லையை வெளுத்து வாங்கி விடுகிறார். அதனை பிரபு வீடீயோ எடுக்கிறார். வெல்லையின் முகத்தை கவர் செய்த அடித்தபோதும், சாதுவாக விஷாலின் முகத்தை பார்த்துவிடுகிறான். அதன் பின் பழி வாங்கும் நோக்குடன் அவரின் அப்பாவுடன் இணைந்து குடும்பத்தை கண்டுபிடிக்கிறான். அப்போது விஷாலும் அவரது 10 வயது மகனும் கட்டப்படாத கட்டிடத்தில் சிக்கிக் கொள்ளுகிறார்கள். அதன் பின் தனது மகனை மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? என்ன நடக்கிறது? என்பதே மீதிக்கதை.

திறமையின் தேடல்

விஷாலின் நடிப்பு படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. அவர் நிச்சயமாக அவரது உடல் மொழியால் வேலை செய்துள்ளார், குறிப்பாக கான்ஸ்டபிள் பாத்திரத்திற்காக. விஷாலின் மனைவி (சுனைனா)அன்பான மனைவி, அன்பு மற்றும் ரொமான்ஸில் பரவாயில்லை ஆனால் முதல் பாதியில் மட்டுமே. ஹீரோவை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் அவர் ஓரங்கட்டப்படுகிறார்.

Laththi movie review

விஷாலின் குழந்தையாக நடித்த சிறுவன் சிறப்பாக நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மூத்த நடிகர் பிரபுவின் பாத்திரம் பெரிதாக இல்லை என்றாலும் நடிப்பு மாறவில்லை. வில்லனான ரமணா நடிப்பு ஓகே தான்

ஏ. வினோத் குமாரின் கதைக்களம் புதிதாக இருந்தாலும் கொஞ்சம் நகரவில்லை. சில இடங்கள் ரசிக்கும்படியான ஆக்ஷன் இருந்தாலும், பல லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. ஆனால், போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை வைத்து இயக்குனர் கையாண்ட விதம் மிகவும் புதுமை.

Laththi movie review

ஸ்டண்ட் காட்சிகளை இயக்கிய பீட்டர் ஹேயின் மாஸ்டருக்கு தனி பாராட்டு. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பின்னணி இசையும் படத்தில் உள்ள உணர்ச்சிகளை உயர்த்த உதவவில்லை. மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் கண்ணியமானவை, மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் யதார்த்தமான முறையில் நடனமாடப்பட்டுள்ளன. பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ண தோட்டா ஒளிப்பதிவுத் துறையை அசத்தி வழிநடத்துகிறார்கள் பின்னணி இசை படத்திற்கு பலம். அவிக் பேனர்ஜி எடிட்டிங் ஓகே.

படத்தின் சிறப்பு

விஷால் அதிரடி காட்சிகள்

ஒளிப்பதிவு ,

பிண்ணனி இசை

படத்தின் சொதப்பல்கள்

ஓவர் டாப் சீன்ஸ்,

இரண்டாம் பாதி

சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை

சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை

Laththi movie review

மதிப்பீடு: 2.75/5

லத்தி சில நேரங்களில் பலமான அடிகளை கொடுக்கிறது, ஆனால் ஒரு சில மட்டுமே உண்மையான வலியை உணர வைக்கின்றன. ஒரு ஆக்ஷ்சன் திரைப்படமாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts