செய்திகள்

73வயதில் 10 வகுப்பு தேர்வு எழுதி வெற்றியடந்த லீனா ஆண்டனி..!(Lena Antony wrote the class 10 exam at age of 73 and won)

நடிகை லீனா ஆண்டனி, ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் ஆவார். இவர் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டதால், அந்த சமயத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு படிக்கவில்லை.

ஆனால் இவருக்கு எப்படியாவது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற ஆசை பல வருடங்களாக இருந்து வந்துள்ளது. அவர் கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். 73 வயதாகும் அவர் பொதுத்தேர்வு எழுதியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

Lena Antony

இதுகுறித்து லீனா கூறியதாவது : “சினிமாவில் டயலாக்குகளை மனப்பாடம் செய்து பேசுவேன். அதைப்போலவே தற்போது மனப்பாடம் செய்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். நிச்சயம் பாஸ் ஆகி விடுவேன் என்கிற நம்பிக்கையும் உள்ளது” என கூறியுள்ளார். தேர்வுக்கு பயந்து இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்ளும் தற்போதைய காலகட்டத்தில், 73 வயதாகும் லீனா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

Similar Posts