லியோவின் வில்லன் சஞ்சய் தத், லியோ படத்தின் செட்டை விட்டு வெளியேறினாரா? | Did Sanjay Dutt, Leo’s villain, leave the sets of Leo?
லியோ படத்தின் அப்டேட்டே ரசிகர்கள் கேட்கக் கூடாது என்கிற அளவுக்கு செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித் அடுத்தடுத்து அப்டேட்களாக கொடுத்து விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறார். கடந்த வாரம் தான் காபி ஷாப் ஒன்றில் சஞ்சய் தத் லியோ ஷூட்டிங்கில் இணைந்த வீடியோ வெளியானது.

கடந்த வாரம் தான் மும்பையில் இருந்து விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்து வந்தார் சஞ்சய் தத். விஜய் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த வீடியோவையும் படக்குழு வெளியிட்டு டிரெண்டாக்கியது. இந்நிலையில், ஒரே வாரத்தில் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலில் தனது போர்ஷனை முடித்து விட்டு கிளம்பி விட்டார் சஞ்சய் தத்.

இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில், “நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் மிகவும் இனிமையாகவும், தன்னடக்கமான மனிதராகவும் இருந்தீர்கள். எங்களின் ஒட்டுமொத்த குழுவும் உங்கள் நடிப்பை மிகவும் அருகிலேயே பார்த்து மகிழ்ந்தோம், நீங்கள் வழக்கம் போல் மிரட்டி விட்டீர்கள் சார். சென்னை ஷெட்யூலில் மீண்டும் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார்” என பதிவிட்டுள்ளனர்.