லைகர் படம் எப்படி இருக்கு பார்க்கலாமா – திரை விமர்சனம்
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடிப்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் லைகர்.

படக்குழு
இயக்கம்:
பூரி ஜெகநாத்
தயாரிப்பு:
கரண் ஜோஹர்
பூரி ஜெகநாத்
சார்மி கவுர்
அபூர்வா மேத்தா
ஹிரு யாஷ் ஜோஹர்
வெளியீடு:
ஏஏ பிலிம்ஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன்
இசை:
சுனில் காஷ்யப், விக்ரம்
படத்தின் கதை
படத்தில் விஜய் தேவர் கொண்டா குத்து சண்டை வீரராக இருக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே மைக் டைசனை குருவாக எண்ணிப் பார்த்து மார்சியல் ஆர்ட்ஸ் குருவாக ஆக மாற வேண்டும் என நினைக்கிறார். இதற்கு இடையில் இவர் அனன்யா பாண்டேவை காதலிக்கிறார். பின் இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், விஜய் தேவர் கொண்டா குருவாக நினைக்கும் மைக் டைசன் தான் படத்தின் வில்லன். மொத்த கும்பலுக்கும் டானாக இருக்கிறார்.

அப்போது விஜய் தேவர் கொண்டாவின் காதலியை மைக் டைசன் கடத்தி விடுகிறார். இறுதியில் விஜய் தேவர் கொண்டா தன்னுடைய கடவுளாக நினைக்கும் மைக் டைசனை எதிர்த்து கடவுளாக தன்னுடைய காதலியை விஜய் தேவர் கொண்டா மீட்டாரா? என்பதை படத்தின் கதை. வழக்கமான அரைத்த மாவையே தான் இயக்குனர் இந்த படத்தில் அரைத்து வைத்திருக்கிறார். படம் முழுக்க ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மகனை குறித்து விடும் பில்டப் டயலாக் எல்லாம் பார்வையாளர்களை எரிச்சல் ஊட்டுகிறது. அதை கேட்டு தியேட்டரிலேயே ரசிகர்கள் பலரும் கிண்டல் அடிக்க செய்துவிட்டனர். ஆனால், இந்த படத்திற்காக விஜய் தேவர் கொண்டா தன்னுடைய உடல் தோற்றத்தை பயங்கரமாக மாற்றி இருந்தார்.

அவர் ஆக்சன் காட்சியில் அசத்தி இருக்கிறார். ஆனால், திக்குவாய் கதாபாத்திரத்தில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை என்று தான் சொல்லணும். இந்த படத்தில் பெரிய தான் காதல் காட்சி தான் இருக்கிறது. ஆரம்பத்தில் விஜய் தேவர் கொண்டவை காதலித்த அனன்யா அவர் திக்குவாய் என்று தெரிந்ததும் விட்டு செல்கிறார். பின் அனன்யாவுடைய அண்ணனை விஜய் தேவர் கொண்டா அடித்ததும் அவர் மீது மீண்டும் காதல் வருகிறது.

காதலை வித்தியாசமாக காட்டுகிறேன் என்று சுதப்பி வைத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா உடைய நடிப்பு மட்டுமே பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஒளிப்பதிவும், மட்டுமே இசையும் படத்திற்கு பலமாக உள்ளது என்று சொல்லலாம். அதே போல் மைக் டைசன் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கிளாப்சை கொடுத்திருக்கிறது. காதல் காட்சியை வைக்கிறேன் என்று விஜய் தேவர் கொண்டாவின் கடின உழைப்பை இயக்குனர் வீணடித்து விட்டார் என்றே சொல்லலாம்.
படத்தின் சிறப்பு
விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு.
சண்டை காட்சிகள்
பின்னணி இசை, ஒளிப்பதிவு பக்கபலம்.
படத்தின் சொதப்பல்கள்
கிளைமாக்ஸ்
இயக்குனரின் கதை மற்றும் திரைக்கதை பெரிய சொதப்பல்
அம்மா- மகன் சென்டிமென்ட் டயலாக் எரிச்சலூட்டுகிறது
மதிப்பீடு: 1.75/5
இப்படத்திற்கு ஏன் இவ்வளவு பெரிய பில்ட் அப் என கேட்கும் படி இருக்கிறது லைகர்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.