செய்திகள்

தோற்றத்திற்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அபர்ணா பாலமுரளி..!(Looks have nothing to do with acting, Actress Aparna Balamurali)

அபர்ணா பாலமுரளி மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து இருந்த சூரரைப்போற்று படம் தான்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடம் பிடித்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் இவருக்கு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. . இந்த நிலையில் சமீபத்தில் அபர்ணா பாலமுரளி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

நான் குண்டாக இருந்தது குறித்து பல்வேறு விதமாக கேவலமாக பேசி இருந்தார்கள். இதெல்லாம் பார்த்த போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதே போல் ஒரு முறை நான் மாடலிங்கில் இருக்கும் போது என்னுடைய ஆடை நீளமான துணியில்லை.

அப்போது அந்த உடையின் புகைப்படத்தை எடுத்து சோசியல் மீடியாவில் மாப்பிங் செய்து ரொம்ப கேவலமாக பதிவிட்டு இருந்தார்கள். இதனால் நான் ரொம்பவே மன அழுத்தத்திற்கு சென்றுவிட்டேன்.உடல் தோற்றத்திற்கும் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பு வரும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் செல்வாக்கிற்கு முன்னாள் அவர்களின் தோற்றம் ஒன்றுமே இல்லை.என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Actress Aparna Balamurali

Similar Posts