புதிய திட்டத்திற்காக புதிய தோற்றத்தில் மாதவன் | Madhavan in a new look for a new project
அலைபாயுதே, மின்னலே படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் வளம் வந்தவர் நடிகர் மாதவன்.இதன்பின்னர் பல திரைப்படங்களில் நடித்த இவர் சில வருடங்கள் திரையுலகில் இருந்து தள்ளிருந்தார்.

ஆனால் சுதா கொங்கரா இயக்கிய இறுதிச் சுற்று படம் வெளியானதையடுத்து மாதவனின் ரசிகர்கள் மாதவனை மீண்டும் கொண்டாடினர்.

இந்நிலையில், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மாதவனுடன் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இணைந்துள்ளார்.

மாதவனுடன் இணையும் இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இவரகள் இருவருடைய கூட்டணியும் இணைந்த காரணம் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது திருச்சிற்றம்பலத்தை மாதவன் பார்த்ததால் அவருக்கு படம் ரொம்ப பிடிச்சுக்கொண்டு தன்னுடைய நண்பரிடம் நம்பரை வாங்கி மித்ரனுக்கு போன் செய்துள்ளார்.

அப்போது போனிலேயே படம் சூப்பராக இருக்கு என்று கூறிவிட்டு நீங்க கதை ஏதும் இருந்தா சொல்லுங்களேன் என மாதவன் கேட்டுள்ளார்.அதற்கு அவரும் கதை இருக்கு சேர் என்று கூறி தான் இவர்களுடைய ப்ரஜக்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாதவன் தனது சமூக வலைதளத்தில் புதிய திட்டத்திற்கான புதிய தோற்றம் என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.