செய்திகள்

சின்ன விஷயத்துக்கு பதறிப்போன மந்தனா..!

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இதன் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெறுகிறது.

சூட்டிங் இல்லாத நேரம் மும்பை வீட்டிற்கு செல்வது ராஷ்மிகா மந்தனாவின் வழக்கம். ராஷ்மிகா மந்தனா ஏர்போர்டிற்கு வருகிறார் என்றாலே அவரை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க போட்டோகிராபர்கள் மும்பை ஏர்போர்ட்டில் குவிவார்கள்.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போட்டோகிராபர் ஒருவர் மீது ஒருவர் மோதி தடுமாறி விழுவார்கள். இந்த முறையும் விழுந்ததை பார்த்து பயந்துபோய் க்யூட்டாக ஒரு ரியாக்சன் கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் ‘இதுக்கு கூடவா பயம்’ என கமெண்ட் செய்கின்றனர்.

இந்த க்யூட் வீடியோ தற்போது ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது.

Similar Posts