மணிமேலை ரசிகர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் | Mani Megalai announced the good news to the fans
குக் வித் கோமாளி மணிமேகலை சொந்த ஊரில், குட்டி சாம்ராஜ்ஜியத்தை தொடங்கி இருக்கிறோம் என பாலகால் பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தொகுப்பாளினி மணிமேகலை தனது இனிமையான பேச்சாலும், வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த போது இவரிடம் பாட்டு கேட்பதற்காக போன் செய்பவர்களை விட இவரிடம் பேசுவதற்கே பல ரசிகர்கள் போன் செய்வார்கள்.

தனது திறமையால் சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தார் மணிமேகலை. சிரிக்க சிரிக்க பேசுவது, யாரையும் புன்படுத்தாத நகைச்சுவை உணர்வே இவரை வெற்றித் தொகுப்பாளினியாக உயர்த்தி உள்ளது. இவர் சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், மணிமேகலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், கணவர் ஹுசைனுடன் நிலத்திற்கு பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அதில், HM பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளால், கடின உழைப்புடனும் எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்குகிறோம், கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். கனவு காணுங்கள் என பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
